Preparation Time: 20 நிமிடங்கள் Cooking Time: 20 நிமிடங்கள்
Hits : 4459 Likes :
Ingredients
கோழிக்கறி (எலும்பு இல்லாதது) 750 கிராம்
கடலைமாவு 100 கிராம்
அரிசிப்பொடி 3 மேஜைக்கரண்டி
மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி
சிகப்பு கலர் பொடி 3 சிட்டிகை
கரம் மஸாலாத்தூள் 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் 2
இஞ்சி 1 அங்குலம்
எலுமிச்சம்பழம் அரை
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 500 மில்லி லிட்டர்
Preparation Method
கோழிக்கறியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாய், இஞ்சியை அரைத்துக் கொள்ளவும்.
கோழிக்கறித் துண்டுகளுடன் அரைத்த கலவை, எலுமிச்சைச்சாறு, உப்பு, இவற்றை சேர்த்து, புரட்டி தனியே வைக்கவும்.
கடலைமாவுடன், தேவையான உப்புத்தூள், அரிசி மாவு, மிளகாய்த்தூள், கரம்மஸாலாத்தூள், கலர் பொடி கலந்து, ஊற வைத்துள்ள கோழிக்கறித் துண்டுகளுடன் கலந்து மறுபடியும் புரட்டி வைக்கவும்.
தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கோழிக்கறி—கடலை மாவு கலவையை சிறிதளவு எடுத்து, எண்ணெய்யில் பிசிறி விட்டு பகோடாக்களாக பொரித்து எடுத்து பரிமாறவும்.