பிரியாணி மஸால் வடை

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 2 மணி நேரம் 15 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 7878
Likes :

Preparation Method

  • கடலைப்பருப்பை 3 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
  • அதன்பின், ஊறிய கடலைப்பருப்பில் 1 மேஜைக்கரண்டி எடுத்து வைக்கவும்.
  • கடலைப்பருப்பை தண்ணீர் சேர்க்காமல் உப்பு சேர்த்து கெட்டியாக ஆட்டி எடுத்துக் கொள்ளவும்.
  • வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலையை நறுக்கிக் கொள்ளவும்.
  • பட்டை, கிராம்பு, இஞ்சி, பூண்டு, மிளகாய்த்தூள் இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • ஆட்டி வைத்துள்ள கடலைப்பருப்புடன் அரைத்த இஞ்சிக்கலவை, சோம்பு, வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, கரம்மஸாலாத்தூள், மஞ்சள்தூள் இவற்றைக் கலந்து கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடலைப்பருப்பு கலவையிலிருந்து சிறிதளவு கையில் எடுத்து, உள்ளங்கையில் வைத்து வடை போல தட்டையாக தட்டி எண்ணெய்யில் போட்டுப் பொரித்து எடுக்கவும்.
  • இதுபோல எல்லா மாவிலும் வடைகள் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA