தக்காளி பிரியாணி

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 25 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 5647
Likes :

Preparation Method

  • அரிசியை 10 நிமிடங்கள் ஊற வைத்து தண்ணீரை வடிய வைத்துக் கொள்ளவும்.
  • தக்காளியை கையினால் கசக்கி, சாறை தனியாக வைத்து, வெளிப்பகுதியை அரைத்து சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயின் நடுவில் கீறிக் கொள்ளவும்.
  • தேங்காயை துறுவி, பால் எடுத்துக் கொள்ளவும்.
  • முதலில் எடுத்த தக்காளி சாறு, அரைத்து எடுத்த தக்காளி சாறு, தேங்காய்ப்பால் அனைத்தும் சேர்ந்து 5 கப் இருக்க வேண்டும் (குறைவாக இருந்தால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்).
  • கனமான பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
  • அதன்பின் இஞ்சி—பூண்டு அரைத்தது போட்டு மிதமான தீயில் வைத்து வதக்கவும்.
  • வதக்கியபின் கொத்தமல்லி, புதினா போட்டு வதக்கவும்.
  • தக்காளி சாறு, தேங்காய் பால் கலவை ஊற்றி, மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
  • கொதித்ததும் அரிசியைப் போட்டுக் கிளறவும்.
  • மூடி வைக்கவும்.
  • சுமார் 10 நிமிடங்கள் ஆனதும் திறந்து நெய் ஊற்றி கிளறி மூடி வைக்கவும்.
  • அரிசி வெந்து, தயாரானதும் இறக்கி வைத்து, 5 நிமிடங்கள் கழித்து எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA