சாம்பார் சாதம்

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 9069
Likes :

Preparation Method

  • துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வெந்ததும், அதில் 6 கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசியைப் போட்டு, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
  • புளியை ஊற வைத்து, கரைத்துக் கொள்ளவும்.
  • காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயின் நடுவே கீறிக் கொள்ளவும்.
  • தக்காளியை நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் நெய் ஊற்றி, காய்ந்ததும் பெருங்காயத்தூள், கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டுத் தாளித்து வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
  • அதன்பின் காய்கறிகளைப் போட்டு வதக்கவும்.
  • காய்கறிகள் வதங்கியதும் புளிக்கரைசலை ஊற்றி, சாம்பார் பொடி, மிளகாய் பொடி சேர்த்துக் கிளறவும்.
  • காய்கறிகள் வெந்ததும் கொதித்துக் கொண்டிருக்கும் அரிசிக் கலவையுடன் சேர்த்துக் கிளறவும்.
  • அனைத்தும் நன்றாகக் கலந்ததும் கொத்தமல்லி இலை போட்டு இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA