Preparation Time: 15 நிமிடங்கள் Cooking Time: 15 நிமிடங்கள்
Hits : 5585 Likes :
Ingredients
பச்சரிசி 500 கிராம்
பெரிய மாங்காய்கள் 3
கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி
சிகப்பு மிளகாய் 10
பெரிய வெங்காயம் 1
கறிவேப்பிலை 1 ஆர்க்கு
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 50 மில்லி லிட்டர்
Preparation Method
மாங்காயின் தோலை சீவியபின் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
மாங்காய் துண்டுகளுடன் தேவையான உப்பு சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும் அல்லது துறுவிக் கொள்ளவும்.
அரிசியை குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
மிளகாயை கிள்ளி வைக்கவும்.
பெரிய அகன்ற வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம், மிளகாய் போட்டுத் தாளித்து மாங்காய் அரைத்தது போட்டு மிதமான தீயில் வைத்து 3 நிமிடங்கள் கிளறியபின் இறக்கி வைத்துக் கொள்ளவும்.
வேக வைத்துள்ள சாதத்தை மாங்காய் கலவையுடன் சேர்த்து மறுபடியும் சூடேற்றி மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் வரை கிளறி இறக்கி பரிமாறவும்.