குஸ்க்கா

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 4755
Likes :

Preparation Method

  • அரிசியை கோழிக்கறி அல்லது ஆட்டுக்கறி வேக வைத்த தண்ணீர் சேர்த்து, உப்பு போட்டு வேக வைத்து, வடித்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தக்காளியை 4 பாகங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயின் நடுவில் கீறிக் கொள்ளவும்.
  • வாணலியில் நெய் ஊற்றி, காய்ந்ததும் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, போட்டு தாளித்து, கொத்தமல்லி இலை, புதினா இலை, போட்டு வதக்கவும்.
  • அதன்பின் வெங்காயம், தக்காளி போட்டு நன்றாக வதக்கி, இறக்கி வைத்துக் கொள்ளவும்.
  • வேக வைத்த சாதத்துடன் வதக்கி இறக்கியவற்றைக் கலந்து, நன்றாகக் கிளறி பரிமாறவும்.
Engineered By ZITIMA