தேங்காய்ப்பால் சாதம்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 8523
Likes :

Preparation Method

 

  • அரிசியை தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • தேங்காயை துறுவிக் கொள்ளவும்.
  • தேங்காய் துறுவலில் 250 மில்லி லிட்டர் பால் எடுத்துக் கொள்ளவும்.
  • முந்திரிப்பருப்பை நெய்யில் வறுத்து, எடுத்து வைக்கவும்.
  • கசகசாவை தனியாக நெய்யில் வறுத்து எடுத்து வைக்கவும்.
  • வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயின் நடுவே கீறிக் கொள்ளவும்.
  • வாணலியில் 1 மேஜைக்கரண்டி நெய் ஊற்றி, காய்ந்ததும் பூண்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி இறக்கி, வைத்துக் கொள்ளவும்.
  • பாத்திரத்தில் தேங்காய்ப்பால், ½ கப் தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு, அரிசியைப் போடவும்.
  • வதக்கி வைத்துள்ள பொருட்களைப் போட்டு மூடி, கொதிக்க வைக்கவும்.
  • மிதமான தீயில் வைத்து, அரிசி வெந்ததும் வறுத்து வைத்துள்ள கசகசா, முந்திரிப்பருப்பு மீதமுள்ள நெய் ஊற்றி, கொத்தமல்லி இலை போட்டுக் கிளறி, இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA