Preparation Time: 20 நிமிடங்கள் Cooking Time: 20 நிமிடங்கள்
Hits : 6507 Likes :
Ingredients
பச்சரிசி 200 கிராம்
கேரட் துறுவல் 6 கப்
பச்சை பட்டாணி (உரித்தது) 100 கிராம்
தேங்காய் 1 மூடி
சிறு பருப்பு 4 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
சிகப்பு மிளகாய் 2
இஞ்சி 2 அங்குலம்
தக்காளிச்சாறு 3 மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய் 6
முந்திரிப்பருப்பு 10
கறிவேப்பிலை 1 ஆர்க்கு
கொத்தமல்லி இலை 1 மேஜைக்கரண்டி
நெய் 1 மேஜைக்கரண்டி
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 2 மேஜைக்கரண்டி
Preparation Method
பாஸ்மதி அரிசி, சீரக சம்பா அரிசி, பச்சரிசி இவற்றில் ஏதாவது அரிசியில் தயாரிக்கலாம்.
தேங்காயை துறுவி பால் எடுத்து அதில் அரிசியைப் போட்டு உப்பு சேர்த்து குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும்.
தேங்காய்ப்பால் மற்றும் தண்ணீர் சேர்த்து 2 டம்ளர் இருக்கலாம்.
சிறுபருப்பை குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும்.
பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும்.
இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை அரைத்துக் கொள்ளவும்.
அடி கனமான பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை, சிகப்பு மிளகாய் போட்டு தாளித்து, இஞ்சி, பச்சை மிளகாய் அரைத்தது போட்டு வதக்கவும்.
வதக்கியபின் கேரட் துறுவல் சேர்த்து மிதமான தீயில் வைத்து வதக்கவும்.
அதன்பின் தக்காளிச்சாறு, பட்டாணி, சிறுபருப்பு, கொத்தமல்லி இலை இவற்றை சேர்த்து கிளறவும்.
கிளறியபின் வேக வைத்த சாதத்தைப் போட்டு மிதமான தீயில் வைத்து கிளறவும்.
முந்திரிப்பருப்பை நெய்யில் வறுத்து, சாதத்துடன் கலந்து கிளறி இறக்கி பரிமாறவும்.