Preparation Time: 15 நிமிடங்கள் Cooking Time: 20 நிமிடங்கள்
Hits : 7639 Likes :
Ingredients
இறால் 750 கிராம்
தனியா 1 தேக்கரண்டி
மிளகு 1 தேக்கரண்டி
தேங்காய்த்துறுவல் 3 மேஜைக்கரண்டி
சின்ன வெங்காயம் 200 கிராம்
இஞ்சி 2 அங்குலம்
பூண்டு 6 பல்
கறிவேப்பிலை 1 ஆர்க்கு
தக்காளி 2
பச்சை மிளகாய் 6
மஞ்சள்தூள் அரை தேக்கரண்டி
கடுகு 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி
புளி 1 கோலி அளவு
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 3 மேஜைக்கரண்டி
Preparation Method
இறாலை சுத்தம் செய்து கொள்ளவும்.
வாணலியில் 1 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தனியா, மிளகு, தேங்காய்த்துறுவல், இவற்றை சிவக்க வறுத்து, ஆறியதும் அரைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயின் நடுவே கீறிக் கொள்ளவும்.
சின்ன வெங்காயம், பூண்டு, புளி இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
இஞ்சியை தோல் நீக்கி, துறுவிக் கொள்ளவும். தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில், மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி துறுவல் போட்டு வதக்கவும்.
அதன்பின் அரைத்த மஸாலா போட்டு நன்றாக வதக்கவும்.
மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும்.
அதன்பின் தக்காளி போட்டு வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் இறாலைப் போட்டு வதக்கி, தேவையான அளவு சுடு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்க்கவும்.