இறால் டோஸ்ட்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 4732
Likes :

Preparation Method

  • இறாலை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயம், மூங்கில் குறுத்து இவற்றை நறுக்கிக் கொள்ளவும்.
  • முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து அடித்துக் கொள்ளவும்.
  • இறால், வெங்காயம், மூங்கில் குறுத்து, பூண்டு பொடி, கொத்தமல்லி இலை, மிளகுத்தூள், உப்பு இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • இறால் கலவையுடன் அடித்து வைத்துள்ள முட்டைக் கலவையை சேர்த்து கொள்ளவும்.
  • ரொட்டித் துண்டுகளின் ஓரங்களை நீக்கியபின் முக்கோண வடிவமான துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
  • ரொட்டித் துண்டுகள் மீது அரைத்து வைத்துள்ள இறால் கலவையை பரவலாக, சமமாக போடவும்.
  • ஒரு தட்டையான தட்டில் எள்ளை பரவலாக தூவவும்.
  • இறால் அரைத்த கலவையை பரப்பி வைத்துள்ள ரொட்டிகளின் பகுதி எள்ளு தூவியுள்ளதன் மீது வைத்து லேஸாக அழுத்தவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இறால் கலவை தடவி, எள்ளு மீது வைத்து அழுத்திய ரொட்டித் துண்டுகளை எண்ணெய்யில் போட்டு பொன் நிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

 

Engineered By ZITIMA