இறால் குழம்பு

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 15 நிமிடங்கள்
Hits   : 13338
Likes :

Preparation Method

  • இறாலுடன் மஞ்சள்தூள் கலந்து வைக்கவும்.
  • இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய் இவற்றை ஒன்றிரண்டாக தட்டி வைத்துக் கொள்ளவும்.
  • பெரிய வெங்காயத்தை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தக்காளியை 4 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • சீரகத்தூள், தனியாத்தூள், சின்ன வெங்காயம், மிளகாய்த்தூள் இவற்றை வழுவழுப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் ஒன்றிரண்டாக தட்டி வைத்துள்ள பொருட்களைப் போட்டு வதக்கவும்.
  • அதன்பின் வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
  • அதன்பின் அரைத்த மஸாலாவைப் போட்டு வதக்கவும்.
  • மஸாலா வதங்கியதும் தேங்காய்ப்பால் ஊற்றி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறவும்.
  • குழம்பு ஓரளவு கெட்டியானதும் இறாலைப் போடவும்.
  • இறால் வெந்து, குழம்பு கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA