இறால் வறுவல்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 21519
Likes :

Preparation Method

  • இறாலுடன் மஞ்சள்தூள் தடவிக் கொள்ளவும்.
  • வெங்காயம், இஞ்சி, பூண்டு இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தேங்காய்த்துறுவல், சீரகத்தூள், மிளகாய்த்தூள் இவற்றை வழுவழுப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், பூண்டு, இஞ்சி போட்டு வதக்கவும்.
  • அதன்பின் அரைத்த மஸாலா போட்டு, மிதமான தீயில் வைத்து நன்றாக வதக்கவும்.
  • வதக்கியபின் இறால் போட்டு, உப்பு சேர்த்து கிளறி விடவும்.
  • மிதமான தீயில் வைத்து, இறால் வெந்து, சிவக்க வறுபட்டதும் எலுமிச்சைச்சாறு ஊற்றி கிளறி இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA