Preparation Time: 10 நிமிடங்கள் Cooking Time: 15 நிமிடங்கள்
Hits : 5760 Likes :
Ingredients
இறால் 500 கிராம்
மைதாமாவு 2 மேஜைக்கரண்டி
கடலைமாவு 5 மேஜைக்கரண்டி
அரிசிமாவு 2 மேஜைக்கரண்டி
சோளமாவு(Corn Flour) 1 மேஜைக்கரண்டி
பூண்டு(அரைத்தது) அரைதேக்கரண்டி
பெரியவெங்காயம் 2
பச்சைமிளகாய் 5
கொத்தமல்லிஇலை 2 மேஜைக்கரண்டி
இஞ்சிஅரைத்ததுஅரைதேக்கரண்டி
முட்டை 3
மிளகுத்தூள் 1 தேக்கரண்டி
உப்புதேவையானஅளவு
இதயம்நல்லெண்ணெய் 500 மில்லிலிட்டர்
Preparation Method
இறாலை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
முட்டையை உப்புத்தூள் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
மைதாமாவு, கடலைமாவு, அரிசிமாவு, சோளமாவு, இஞ்சி அரைத்தது, பூண்டு அரைத்தது, நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி இலை, மிளகுத்தூள், உப்பு, முட்டை இவற்றை நன்றாக கலந்து கொள்ளவும்.
இக்கலவையுடன் இறாலைப் போட்டு புரட்டி வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இறால் கலவையில் உருண்டைகள் செய்து, ஒரு முறைக்கு 5 அல்லது 6 வீதம் போட்டு பொன் நிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.