Preparation Time: 10 நிமிடங்கள் Cooking Time: 30 நிமிடங்கள்
Hits : 4439 Likes :
Ingredients
இறால் 500 கிராம்
கத்தரிக்காய் 200 கிராம்
பூண்டு 4 பல்
பச்சைமிளகாய் 6
தக்காளி 1
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
சீரகம் 2 தேக்கரண்டி
கொத்தமல்லிஇலை 1 மேஜைக்கரண்டி
கடுகு 1 தேக்கரண்டி
உப்புதேவையானஅளவு
இதயம்நல்லெண்ணெய் 100 மில்லிலிட்டர்
Preparation Method
வாணலியில் 5 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இறாலைப் போட்டு பொரித்து எடுத்து தனியே வைக்கவும்.
கத்தரிக்காயை மெல்லிய நீளமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
கொத்தமல்லி இலை, கடுகு, பூண்டு, பச்சை மிளகாய் இவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
இறால் பொரித்த எண்ணெய்யுடன் மேலும் 5 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய வைத்து கத்தரிக்காய் துண்டுகளைப் போட்டு பொரித்து எடுத்து, தனியே வைத்துக் கொள்ளவும்.
அடி கனமான பாத்திரம் அல்லது Sauce Pan—ல் 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம் போட்டு தாளித்து, தக்காளி போட்டு வதக்கவும்.
வதக்கியபின் அரைத்த மஸாலா போட்டு, மிதமான தீயில் வைத்து நன்றாக வதக்கவும்.
மஸாலா நன்றாக வதங்கியதும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறி, பொரித்து வைத்துள்ள கத்தரிக்காய் மற்றும் இறாலைப் போட்டு, கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.