இறால்—சுரைக்காய் குழம்பு

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 3701
Likes :

Preparation Method

  • இறாலுடன் மஞ்சள்தூள், உப்புத்தூள் சேர்த்து புரட்டி வைக்கவும்.
  • வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • சுரைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தேங்காய்த்துறுவல், புளி, பச்சை மிளகாய் இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
  • அதன்பின் இஞ்சிபூண்டு அரைத்தது போட்டு வதக்கி, சுரைக்காய், தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் இவற்றைப் போட்டு 5 நிமிடங்கள் வதக்கவும்.
  • அதன்பின் இறால் போட்டு, சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்து கிளறி விடவும்.
  • இறால், சுரைக்காய் வெந்ததும் தேங்காய் அரைத்த கலவை போட்டு மிதமான தீயில் வைத்து கிளறி இறக்கி கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

 

Engineered By ZITIMA