Preparation Time: 15 நிமிடங்கள் Cooking Time: 25 நிமிடங்கள்
Hits : 9853 Likes :
Ingredients
உருளைக்கிழங்கு 500 கிராம்
தயிர் 50 மில்லி லிட்டர்
சோம்பு 2 தேக்கரண்டி
கசூரி மேத்தி (உலர்ந்த வெந்தயக்கீரை) 2 தேக்கரண்டி
கரம் மஸாலாத்தூள் 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை 2 மேஜைக்கரண்டி
தனியாத்தூள் 2 தேக்கரண்டி
சீரகத்தூள் 2 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 50 மில்லி லிட்டர்
Preparation Method
உருளைக்கிழங்கை குழையாமல் வேக வைத்து, தோல் நீக்கி, பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சோம்பு போட்டுத் தாளித்து, தனியாத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், உப்பு போட்டு தயிர் சேர்த்து 3 நிமிடங்கள் கிளறவும்.
அதன்பின் உருளைக்கிழங்கு துண்டுகள் போட்டு வதக்கவும்.
உருளைக்கிழங்கு வெந்து, மஸாலா முழுவதும் கிழங்கின் மீது படிந்து, வதங்கியதும் கசூரி மேத்தி, கொத்தமல்லி இலை, கரம்மஸாலாத்தூள் போட்டு, இறக்கி பரிமாறவும்.