உருளைக்கிழங்கு—புடலங்காய் வடை

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 6631
Likes :

Preparation Method

  • உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி பிசைந்து கொள்ளவும்.
  • புடலங்காயின் தோலை சீவியபின் பொடியாக நறுக்கி குழைந்து விடாமல் லேஸாக வேக வைத்துக் கொள்ளவும்.
  • அரிசியை லேஸாக வறுத்து, கரகரப்பான தூளாக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • உருளைக்கிழங்கு, புடலங்காய், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, சீரகம், உப்பு, தூளாக்கிய அரிசி, பொரிகடலைத்தூள் இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்.
  • கையில் சிறிதளவு எண்ணெய் தடவிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.
  • அதன்பின் மேற்கூறிய கலவையில் சிறிதளவு எடுத்து, உருண்டையாக்கி, லேஸாக தட்டி, ஓரங்கள் விரிந்து விடாமல் லேஸாக அழுத்தியபின், எண்ணெய்யில் போட்டு, பொன்நிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA