நார்த்தங்காய் ஊறுகாய்

Spread The Taste
Makes
500 கிராம்
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 13650
Likes :

Preparation Method

  • நார்த்தங்காயை அரை வேக்காடாக வேக வைத்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் 4 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நார்த்தங்காய் துண்டுகளை லேசாக வதக்கி இறக்கிக் கொள்ளவும்.
  • ஆறியதும் மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்புத்தூள், பெருங்காயத்தூள் போட்டு கிளறிவிடவும்.
  • கடுகு, வெந்தயத்தை வறுத்து தூளாக்கிக் கொள்ளவும்.
  • நார்த்தாங்காயை 3 அல்லது 4 நாட்கள் ஊறவிடவும்.
  • அதன்பின் வாணலியில் மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் ஊறிக் கொண்டிருக்கும் நார்த்தங்காய் கலவையில் ஊற்றி, வறுத்து வைத்துள்ள கடுகு, வெந்தயத்தைப் போட்டுக் கிளறி, எடுத்து பாட்டிலில் போட்டு வைத்து தேவையான போது எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA