மீன் ஊறுகாய்

Spread The Taste
Makes
300 கிராம் ஊறுகாய்
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 3638
Likes :

Preparation Method

  • மீன் துண்டுகளுடன் மஞ்சள்தூள், மிளகுத்தூள், உப்புத்தூள் போட்டுக் கலந்து 30 நிமிடங்கள் ஊற விடவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மீன் துண்டுகளைப் போட்டு லேஸாக சிவந்ததும் எடுத்து, தனியே வைக்கவும்.
  • இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வேறு வாணலியில் 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் இவற்றைப் போட்டு வதக்கி, வறுத்து வைத்துள்ள மீன் துண்டுகளுடன் போடவும்.
  • அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி, லேஸாகக் காய்ந்ததும் மிளகாய்த்தூள் போட்டு வறுத்து, வினிகர், உப்புத்தூள் சேர்த்துக் கிளறி, இறக்கி வைக்கவும்.
  • ஆறியதும் மீன் துண்டுகளுடன் கலந்து கொள்ளவும்.
  • வெந்தயத்தை வறுத்து, தூளாக்கி கலந்து, பாட்டில்களில் எடுத்து, தேவையானபோது பரிமாறவும்.
Engineered By ZITIMA