கறிவேப்பிலை தொக்கு

Spread The Taste
Makes
2 பாட்டில்
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 15 நிமிடங்கள்
Hits   : 5308
Likes :

Preparation Method

  • வாணலியில் 5 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கறிவேப்பிலையை முறுகலாக வறுத்து எடுத்து, தனியே வைக்கவும்.
  • இதே எண்ணெய்யில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, சீரகம், மிளகாய் இவற்றைப் போட்டு வறுத்து எடுக்கவும்.
  • புளியை ஊற வைத்து, கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.
  • வேறு வாணலியில் கடுகு, வெந்தயத்தை வறுத்து (Dry Roast) எடுத்து வைக்கவும்.
  • கறிவேப்பிலை, வறுத்த பொருட்கள், பெருங்காயத்தூள் இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • கனமான வாணலியில் மீதமுள்ள எண்ணெய்யை ஊற்றி, காய்ந்ததும் அரைத்த வைத்துள்ள கறிவேப்பிலை கலவையைப் போட்டு வதக்கவும்.
  • புளிக்கரைசல், உப்பு சேர்த்து, மிதமான தீயில் வைத்து வதக்கி, தொக்குப்பதம் வந்ததும் இறக்கி, ஆறியதும் பாட்டிலில் எடுத்து வைத்து தேவையானபோது பயன்படுத்தவும்.
Engineered By ZITIMA