Preparation Time: 3 நிமிடம் Cooking Time: 45 நிமிடங்கள்
Hits : 11396 Likes :
Ingredients
மைதா மாவு 500 கிராம்
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 50 மில்லி லிட்டர்
Preparation Method
மைதா மாவுடன், உப்பு, தண்ணீர் சேர்த்து, சற்று இளக்கமாகப் பிசைந்து, இதயம் நல்லெண்ணெய் ஊற்றி மறுபடியும் பிசைந்து, பாத்திரத்தில் போட்டு, 2 மணி நேரம் அப்படியே மூடி வைக்கவும்.
அதன்பின் பூரிப்பலகை மீது சிறிதளவு இதயம் நல்லெண்ணெய் தடவிக் கொள்ளவும்.
சிறிதளவு மாவை எடுத்து, உருண்டையாக்கி, பூரிப்பலகை மீது வைத்து, விரல்களால் தட்டி பலகை அளவு இழுத்து, விரிக்கவும்.
விரித்த மாவை மடிப்புகளாக செய்து, நீளமாக ஆனதும், அப்படியே வட்டமாக சுற்றி, அரை அங்குல பருமனாகத் தட்டிக் கொள்ளவும்.
தோசைக்கல்லில் சிறிதளவு இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பரோட்டாவைப் போடவும்.
சுற்றிலும் சிறிது இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும், பரோட்டா, பொன் நிறமாக சிவந்து, வெந்ததும் எடுத்து, பரிமாறவும்.