புதினா பரோட்டா

Spread The Taste
Serves
5 நபர்களுக்கு
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 1 பரோட்டாவிற்கு 7 நிமிடங்கள்
Hits   : 7288
Likes :

Preparation Method

  • மைதா மாவை சலித்து வைத்துக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயை அரைத்துக் கொள்ளவும்.
  • புதினாவை நறுக்கிக் கொள்ளவும்.
  • மைதாமாவு, உப்பு, சிறிதளவு தண்ணீர், புதினா, அரைத்த பச்சை மிளகாய், நெய், 1 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் இவற்றை கலந்து, சற்று தளர்த்தியாக பிசைந்து, 3 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் சேர்த்து மறுபடியும் பிசைந்து மூடி 6 மணி நேரம் அப்படியே வைக்கவும்.
  • அதன்பின், மாவை உருண்டைகளாக செய்து பூரிப்பலகை மீது வைத்து விரல்களால் தட்டி, பலகை அளவு இழுத்து விரிக்கவும்.
  • விரித்த மாவை மடிப்புகளாக செய்து, நீளமாக ஆனதும், அப்படியே வட்டமாக சுற்றி, அரை அங்குல பருமனாக தட்டிக் கொள்ளவும்.
  • தோசைக்கல்லில் சிறிதளவு இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பரோட்டாவைப் போடவும்.
  • சுற்றிலும் சிறிது இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும், பரோட்டா, பொன் நிறமாக சிவந்து, வெந்ததும் எடுக்கவும்.
  • இது போல் எல்லா மாவிலும் பரோட்டா தயாரித்து, பரிமாறவும்.
Engineered By ZITIMA