ஸிலோன் எக் பரோட்டா

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 45 நிமிடங்கள்
Hits   : 11532
Likes :

Preparation Method

கொத்துக்கறி மஸாலா செய்முறை:

  • கொத்தக்கறியுடன் மஞ்சள்தூள், சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு போட்டு வதக்கி, கொத்துக்கறியைப் போட்டு கிளறவும்.
  • மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு போட்டுக் கிளறி நன்றாக வதக்கி, கெட்டியானதும் இறக்கி வைக்கவும்.

பரோட்டா செய்முறை:

  • மைதா மாவுடன் உப்பு, பேக்கிங் பவுடர், வெண்ணெய், தயிர் இவற்றைப் போட்டுக் கலந்து, பிசைந்து இருபது நிமிடங்கள் ஊற விடவும்.
  • முட்டையுடன் சிறிது உப்புத்தூள் கலந்து அடித்துக் கொள்ளவும்.
  • மாவில் இருந்து சிறிதளவு எடுத்து உருண்டையாக்கி, பூரிப்பலகை மீது வைத்து, மிக மெல்லியதாக விரிக்கவும்.
  • தோசைக் கல்லை காய வைத்து, விரித்த மாவைப் போட்டு, முட்டையை கரண்டியில் எடுத்து பரவலாக தடவவும்.
  • கொத்துக்கறி மஸாலாவை இதன் மீது பரப்பவும்.
  • மாவை, இடது பக்கமும், வலது பக்கமும் மடக்கி மூடவும்.
  • கவனமாக திருப்பிப் போட்டு, பொன்நிறமானதும் எடுத்துப் பரிமாறவும்.
Engineered By ZITIMA