Preparation Time: 20 நிமிடங்கள் Cooking Time: 40 நிமிடங்கள்
Hits : 7414 Likes :
Ingredients
பனீர் துண்டுகள் 200 கிராம்
பெரிய வெங்காயம் 2
குடமிளகாய் அரை
துணியில் வடிகட்டிய தயிர் 50 மில்லி லிட்டர்
இஞ்சி— பூண்டு அரைத்தது 3 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி
கரம்மஸாலாத்தூள் 4 சிட்டிகை
மஞ்சள்தூள் 2 சிட்டிகை
கசூரிமேத்தி 2 சிட்டிகை
பிரியானி இலை 1 துண்டு
முந்திரிப்பருப்பு 15
தக்காளி 2
ஏலக்காய் 2
ஃப்ரெஷ் க்ரீம் 3 மேஜைக்கரண்டி
கொத்தமல்லி இலை 1 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
வெண்ணெய் 2 மேஜைக்கரண்டி
இதயம் நல்லெண்ணெய் 2 மேஜைக்கரண்டி
Preparation Method
பனீர் துண்டுகளுடன் தயிர், 1½ தேக்கரண்டி இஞ்சி— பூண்டு அரைத்தது, ½ தேக்கரண்டி மிளகாய்த்தூள், 2 சிட்டிகை கரம் மஸாலாத்தூள், 1 சிட்டிகை மஞ்சள்தூள், 1 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் கசூரிமேத்தி, இவற்றை சேர்த்து, நன்றாகக் கலந்து புரட்டி தனியே வைத்துக் கொள்ளவும்.
தக்காளி மற்றும் முந்திரிப்பருப்பை வழுவழுப்பாக அரைத்து, தனியே வைக்கவும்.
அகன்ற வாணலியில் வெண்ணெய் போட்டு, ஊற வைத்துள்ள பனீர் துண்டுகளைப் போட்டு, ஊற வைப்பதற்காக சேர்த்துள்ள மஸாலா முழுவதும் பொன் நிறமாக வதக்கி, வெங்காயம், குடமிளகாயைப் போட்டு வதக்கிய பிறகு, பனீர் கலவையில் போட்டு வதக்கிக் கொள்ளவும்.
வேறு வாணலியில் 1 மேஜைக்கரண்டி எண்ணெய் பிரியாணி இலை, ஏலக்காய், மீதமுள்ள இஞ்சி, பூண்டு அரைத்தது போட்டு நன்றாக வதக்கவும். வெங்காயம், தக்காளி, முந்திரிப்பருப்பு அரைத்தது போட்டு மிளகாய்த்தூள், கரம்மஸாலாத்தூள், உப்பு இவற்றைப் போட்டு 1 நிமிடம் வதக்கவும்.
1 கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும், பனீர் கலவை, கசூரி மேத்தி இவற்றைப் போட்டு 1 நிமிடம் வதக்கி, ஃப்ரெஷ் க்ரீம் மற்றும் கொத்தமல்லி இலை போட்டுக் கிளறி இறக்கி பரிமாறவும்.