பனீர் டிக்கா

Spread The Taste
Serves
3 நபர்களுக்கு
Preparation Time: 2 மணி 30 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 10170
Likes :

Preparation Method

  • பனீரை தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • 2 வண்ண குடமிளகாய்களையும் விதைகளை நீக்கி விட்டு முக்கோண வடிவ துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பாத்திரத்தில் தயிரைப் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
  • தயிருடன் இஞ்சி—பூண்டு அரைத்தது, ஓமம், கறுப்பு உப்பு, ஆம்ச்சூர்பொடி, உப்பு, எலுமிச்சைச்சாறு, கரம்மஸாலாத்தூள், சீரகத்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள், குடமிளகாய் துண்டுகள், பனீர் துண்டுகள் இவற்றைப் போட்டு கலந்து 2 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
  • அதன்பின் பனீர் கலவையின் குளிர்த்தன்மை நீங்கும் வரை வெளியே எடுத்து வைக்கவும்.
  • Skewer—ல் குடமிளகாய், பனீர் இரண்டையும் மாறி மாறி வைத்துக் கொள்ளவும்.
  • அவன்—ஐ (Oven) 1800யில் முன் கூட்டியே சூடாக்கிக் கொள்ளவும்.
  • அவன்—ல் பயன்படுத்தும் (Rack) அகலமான தட்டில் வெண்ணெய் தடவியபின் பனீர் துண்டுகள் வைத்து skewers—ஐ அடுக்கவும்.
  • Skewers— வைக்கப்பட்ட தட்டை அவன்—ல் வைக்கவும்.
  • 10 நிமிடங்கள் கழித்து Skewer—ஐ திருப்பி விடவும். மேலும் சிறிதளவு வெண்ணெயை தடவவும். மறுபடியும் 10 நிமிடங்கள் அவன்—ல் (oven) வைத்து எடுக்கவும்.
  • அதன் பின் பனீர் துண்டுகள், குடமிளகாய் துண்டுகளை ஒரு தட்டில் அடுக்கி வைத்து சாட் மஸாலா தூவியபின் எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA