பனீர் மஸாலா குழம்பு

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 4286
Likes :

Preparation Method

  • பனீரை துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
  • சின்ன வெங்காயம் மற்றும் 1 பெரிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி இவற்றை நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய பொருட்களை போட்டு நன்றாக வதக்கி எடுத்து ஆறியதும் அரைத்துக் கொள்ளவும்.
  • மீதமுள்ள வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம் போட்டு வதக்கி, எவரெஸ்ட் பொடிகளில் ஒவ்வொன்றிலும் 1 சிட்டிகை போட்டு, அதன்பின் அரைத்து வைத்துள்ள மஸாலாவைப் போட்டு மீதமுள்ள எவரெஸ்ட் பொடிகள் ஒவ்வொன்றையும் போடவும். மிளகாய்த்தூள், உப்பு சேர்க்கவும்.
  • மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் ஆனதும் பனீர் துண்டுகளைப் போட்டு 3 நிமிடங்கள் ஆனதும் இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA