தயிர்-பனீர் மஸாலா

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 4924
Likes :

Preparation Method

  • பனீர் துண்டுகளை தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயம், பூண்டு, மிளகாய், தக்காளி, 3 மேஜைக்கரண்டி, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, தேங்காய்த்துறுவல், ஏலக்காய், தனியாத்தூள், மிளகாய்த்தூள், கிராம்பு, கசகசா, இஞ்சி இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • அடி கனமான பாத்திரம் அல்லது வாணலியில் வெண்ணெய் போட்டு லேஸாக உருகியதும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அரைத்த மஸாலாவைப் போட்டு நன்றாக வதக்கவும்.
  • மஸாலா பொருட்களின் பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கிய பின், தயிர், உப்பு சேர்த்துக் கிளறவும்.
  • மஸாலாவில் எண்ணெய் மிதந்ததும் பனீர் துண்டுகளைப் போட்டு கலவையைக் கிளறவும்.
  • 3 நிமிடங்கள் கொதித்ததும் மீதமுள்ள கொத்தமல்லி இலை போட்டு இறக்கி, சப்பாத்தி, பரோட்டாவுடன் பரிமாறலாம்.
Engineered By ZITIMA