Preparation Time: 10 நிமிடங்கள் Cooking Time: 10 நிமிடங்கள்
Hits : 6717 Likes :
Ingredients
பனீர் 300 கிராம்
பச்சை மிளகாய் 6
பூண்டு 5 பல்
கொத்தமல்லி இலை 1 மேஜைக்கரண்டி
சோளமாவு (Corn Flour) 2 மேஜைக்கரண்டி
மிளகுத்தூள் அரை தேக்கரண்டி
ஸோயாஸாஸ் (Soya Sauce) 2 தேக்கரண்டி
சில்லி ஸாஸ் (Chilli Sauce) 1 மேஜைக்கரண்டி
தக்காளி ஸாஸ் (Tomato Sauce) 2 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 300 மில்லி லிட்டர்
Preparation Method
பனீர் துண்டுகள் தயாராக வைத்துக் கொள்ளவும்.
பூண்டை ஒன்றிரண்டாக தட்டிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயின் நடுவில் கீறிக் கொள்ளவும்.
சோள மாவை சிறிதளவு உப்புத்தூள், தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு போல கரைத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பனீர் துண்டுகளை சோள மாவில் நனைத்து, எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்து தனியே வைக்கவும்.
வேறு வாணலியில் 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தட்டி வைத்துள்ள பூண்டு, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
அதன்பின் ஸோயா ஸாஸ், மிளகுத்தூள், தக்காளி ஸாஸ், சில்லி ஸாஸ் தேவைப்பட்டால் உப்புத்தூள் இவற்றைப் போட்டு கிளறியபின் பொரித்து வைத்துள்ள பனீர் துண்டுகள், கொத்தமல்லி இலை இவற்றை சேர்த்து நன்றாக கிளறிபின், இறக்கி பரிமாறவும்.