காளான் குழம்பு

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 15 நிமிடங்கள்
Hits   : 10083
Likes :

Preparation Method

  • காளானுடன் 2 சிட்டிகை உப்பு கலந்து 1 நிமிடம் ஆனதும் கழுவி கொள்ளவும்.
  • வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
  • காளானை 2 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • சீரகம், மிளகு, தேங்காய்த்துறுவல் இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை போட்டு வதக்கி அரைத்த மஸாலாவைப் போட்டு வதக்கவும்.
  • அதன்பின் காளானைப் போட்டு 2 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து வதக்கவும்.
  • அதன்பின் தேவையான அளவு சுடு தண்ணீர் ஊற்றி, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் போட்டுக் கிளறவும்.
  • காளான் வெந்து, குழம்பு கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA