மாலத்தீவு காளான் குழம்பு

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 7060
Likes :

Preparation Method

  • காளானுடன் எலுமிச்சைச்சாறு, 2 சிட்டிகை உப்புத்தூள் கலந்து 2 நிமிடங்கள் கழித்து நன்றாகக் கழுவிக் கொள்ளவும்.
  • தேங்காய்த்துறுவலை வழுவழுப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • உருளைக்கிழங்கை வேக வைத்து, சதுர வடிவமாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தனியா, சீரகம், மிளகு, வெந்தயம், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, சிகப்பு மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் வறுத்துத் தூளாக்கிக் கொள்ளவும்.
  • காளானை வேக வைத்துக் கொள்ளவும்.
  • அடி கனமான பாத்திரம் அல்லது வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
  • இஞ்சி—பூண்டு அரைத்தது போட்டு வதக்கவும்.
  • வேக வைத்த காளானை சேர்த்து வதக்கவும்.
  • வேக வைத்த உருளைக்கிழங்குத் துண்டுகளைப் போட்டு வதக்கவும்.
  • 3 நிமிடங்கள் ஆனபின் அரைத்த தேங்காய், மஞ்சள்தூள், உப்பு, மஸாலாத்தூள் சேர்த்து, கொதித்ததும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
  • குழம்பு பதம் வந்ததும், இறக்கி சப்பாத்தி, பரோட்டா, பூரி இவற்றுடன் பரிமாறவும்.
Engineered By ZITIMA