Preparation Time: 20 நிமிடங்கள் Cooking Time: 40 நிமிடங்கள்
Hits : 8662 Likes :
Ingredients
ஆட்டுக்கறி (தொடைக்கறி) 500 கிராம்
பெரிய வெங்காயம் 1
சின்ன வெங்காயம் 10
இஞ்சி 2 அங்குலம்
பூண்டு 6 பல்
மிளகு 1 தேக்கரண்டி
பட்டை 2 துண்டு
ஏலக்காய் 2
சிகப்பு மிளகாய் 6
கிராம்பு 2
பச்சை மிளகாய் 2
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை 1 மேஜைக்கரண்டி
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 50 மில்லி லிட்டர்
Preparation Method
கறியை சிறு துண்டுகளாக நறுக்கி, சுத்தம் செய்து கொள்ளவும்.
பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை வட்ட வடிவ துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
இஞ்சியை துறுவிக் கொள்ளவும்.
துறுவிய இஞ்சியில் பாதி அளவு, உப்பு இவற்றுடன் கறித் துண்டுகளைப் போட்டு 30 நிமிடங்கள் ஊற விடவும்.
1 ஏலக்காய், 1 பட்டை, மிளகு, 3 சிகப்பு மிளகாய், பூண்டு, 1 கிராம்பு, சின்ன வெங்காயம் இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
வாணலி அல்லது கனமான பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மீதமுள்ள பட்டை, கிராம்பு, ஏலக்காய், இஞ்சி துறுவல், வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
அதன்பின் கறித்துண்டுகளைப் போட்டு 5 நிமிடங்கள் வதக்கவும்.
வதக்கியபின் அரைத்த மஸாலா, மஞ்சள்தூள் போட்டு மேலும் 5 நிமிடங்கள் வதக்கவும்.
அதன்பின் கறி வேகுவதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும்.
கறி வெந்து, மஸாலா கெட்டியானதும் கொத்தமல்லி இலை போட்டு இறக்கி, பரிமாறவும்.