வெங்காய மட்டன் குருமா

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 40 நிமிடங்கள்
Hits   : 9161
Likes :

Preparation Method

  • ஆட்டுக்கறித் துண்டுகள், தண்ணீர், மஞ்சள்தூள், சின்ன வெங்காயம், 1 தேக்கரண்டி இஞ்சிபூண்டு அரைத்தது, உப்பு இவற்றைக் கலந்து, வேக வைத்துக் கொள்ளவும்.
  • பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம் போட்டு மிகவும் சிவக்க, (Brown Color) வறுத்து எடுத்து, ஆற விடவும்.
  • ஆறியதும் தயிர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • அடிகனமான பாத்திரத்தில் 3 மேஜைக்ககரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய் போட்டு தாளித்து இஞ்சிபூண்டு அரைத்தது போட்டு வதக்கவும்.
  • அதன்பின் அரைத்து வைத்துள்ள வெங்காயக்கலவை போட்டு மிதமான தீயில் வைத்து வதக்கவும்.
  • வதக்கியபின் தனியாத்தூள், மிளகாய்த்தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள், தக்காளி ஸாஸ், கரம்மஸாலாத்தூள் இவற்றைப் போட்டு மேலும் நன்றாக வதக்கவும்.
  • அனைத்தும் நன்றாக வதங்கியதும் வேக வைத்துள்ள கறித் துண்டுகளை, கறி வேக வைத்த தண்ணீரோடு சேர்த்து கிளறவும்.
  • உப்பு சரி பார்த்துக் கொள்ளவும்.
  • 5 நிமிடங்கள் ஆனபின் இறக்கி பரிமாறலாம்.
Engineered By ZITIMA