கோளா உருண்டை குழம்பு

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 15421
Likes :

Preparation Method

உருண்டைகள் செய்முறை
  • கொத்துக்கறியுடன் இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், பட்டை, கிராம்பு, வெங்காயம், சோம்பு, கொத்தமல்லி இலை, மஞ்சள்தூள், உப்பு இவற்றைக் கலந்து ஆட்டி, உருண்டைகளாக செய்து வைத்துக் கொள்ளவும்.

குழம்பு செய்முறை
  • வாணலியைக் காய வைத்து, சிகப்பு மிளகாய், தனியா, சீரகம், பட்டை, கிராம்பு கசகசா, சோம்பு இவற்றை வறுத்துக் கொள்ளவும்.
  • வறுத்த பொருட்களுடன் பூண்டு, முந்திரிப்பருப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • தேங்காயைத் துறுவி 1 கப் பால் எடுத்துக் கொள்ளவும்.
  • பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • அகன்ற வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, சோம்பு போட்டுத் தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் அரைத்த மஸாலாவைப் போட்டு வதக்கி, தேங்காய்ப்பால் ஊற்றவும்.
  • மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கிளறி விடவும்.
  • கொதித்ததும் கறி உருண்டைகளைப் போடவும்.
  • மிதமான தீயில் வைத்து, கறி உருண்டைகள் வெந்ததும் இறக்கி, பரிமாறவும்.

Engineered By ZITIMA