சில்லி மட்டன்

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 40 நிமிடங்கள்
Hits   : 10853
Likes :

Preparation Method

 

  • கறித்துண்டுகளை சுத்தம் செய்து கொள்ளவும்.
  • பூண்டை ஒன்றிரண்டாக தட்டிக் கொள்ளவும்.
  • இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பாத்திரத்தில் (Bowl) தயிர், பூண்டு, இஞ்சி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம்மஸாலாத்தூள், உப்பு, கறித்துண்டுகள் இவற்றைப் போட்டு கலந்து 1 மணிநேரம் ஊற விடவும்.
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாய், சிகப்பு மிளகாய் இவற்றை நடுவே கீறி வைத்துக் கொள்ளவும்.
  • அகன்ற வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, பிரியாணி இலை, கறிவேப்பிலை போட்டு தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கி ஊற வைத்துள்ள கறித்துண்டுகளை (தயிருடன்) போட்டு மிளகாய்த்தூள், சீரகத்தூள், ஏலக்காய் பொடி போட்டுக் கிளறி விடவும்.
  • தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றவும்.
  • தயிர் மற்றும் தண்ணீர் வற்றி, கறித்துண்டுகள் வெந்ததும் சிகப்பு மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்துக் கிளறி 1 நிமிடம் ஆனபின் கொத்தமல்லி இலை போட்டு இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA