Preparation Time: 20 நிமிடங்கள் Cooking Time: 20 நிமிடங்கள்
Hits : 4853 Likes :
Ingredients
மைதாமாவு 200 கிராம்
ஈஸ்ட் (Yeast) 1 தேக்கரண்டி
உருளைக்கிழங்கு 200 கிராம்
தனியா 1 தேக்கரண்டி
சர்க்கரை (Sugar) 1 தேக்கரண்டி
ஆம்ச்சூர் பவுடர் (Amchur Powder) 3 சிட்டிகை
மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி
எலுமிச்சைச்சாறு 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் 1
கொத்தமல்லி இலை 1 மேஜைக்கரண்டி
உப்பு தேவையான அளவு
நெய் 1 தேக்கரண்டி
இதயம் நல்லெண்ணெய் 3 மேஜைக்கரண்டி
Preparation Method
வெது வெதுப்பான தண்ணீரில் ஈஸ்ட் கலந்து 5 நிமிடங்கள் ஊற விடவும்.
அதன்பின் மைதாமாவு, உப்புத்தூள், நெய், ஈஸ்ட் கலந்த தண்ணீர் இவற்றைக் கலந்து பூரி மாவு போல பிசைந்து, மூடி 30 நிமிடங்கள் ஊற விடவும்.
தனியாவை ஒன்றிரண்டாக தூளாக்கிக் கொள்ளவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம் போட்டு வதக்கி இறக்கிக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் நீக்கி, உப்புத்தூள், கொத்தமல்லி இலை, ஆம்ச்சூர் பவுடர், மிளகாய்த்தூள், தனியாத்தூள், எலுமிச்சைச்சாறு, வதக்கிய வெங்காயம், சர்க்கரை இவற்றை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
பூரிப்பலகையில் மைதாவை வட்டமாக தேய்க்கவும். இதன் நடுவே உருளைக்கிழங்கு கலவையில் இருந்து சிறிதளவு எடுத்து வைத்து மூடி, சிறிதளவு மைதாமாவு தூவி மறுபடியும் வட்டமாக தேய்க்கவும்.
இதுபோல, பிசைந்து வைத்த மாவில் வட்டங்கள் செய்து வைத்துக் கொள்ளவும்.
தோசைக்கல்லை காய வைத்து ஒவ்வொரு வட்டத்தையும் போட்டு, சிறிதளவு இதயம் நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக வெந்ததும் எடுத்து பரிமாறவும்.