மேத்தி சப்பாத்தி

Spread The Taste
Serves
3 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 1 சப்பாத்திக்கு 5 நிமிடங்கள்
Hits   : 7119
Likes :

Preparation Method

  • கோதுமை மாவு தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • வெந்தயக்கீரையை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும்.
  • கோதுமை மாவுடன் உப்புத்தூள், கீரை, நெய், சிறிதளவு தண்ணீர் இவற்றை சேர்த்து கெட்டியாக பிசைந்து மூடி 20 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
  • அதன்பின் மாவில் இருந்து சிறிதளவு எடுத்து உருண்டையாக்கி, பூரிப்பலகை மீது வைத்து வட்டமாகத் தேய்த்துக் கொள்ளவும்.
  • இதுபோல எல்லா மாவிலும் தேய்த்து வைத்துக் கொள்ளவும்.
  • தோசைக்கல்லைக் காய வைத்து, காய்ந்ததும் 1 சப்பாத்தியைப் போடவும்.
  • 1 நிமிடம் ஆனதும் திருப்பிப் போடவும். மறுபடியும் திருப்பிப் போடும் போது சிறிதளவு இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும். இப்போது சப்பாத்தி லேசாக எழும்பும்.
  • இரண்டு பக்கமும் வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA