Preparation Time: 25 நிமிடங்கள் Cooking Time: 1 சப்பாத்திக்கு 4 நிமிடங்கள்
Hits : 7254 Likes :
Ingredients
கோதுமை மாவு 2 கப்
உருளைக்கிழங்கு 500 கிராம்
இஞ்சி 2 அங்குலம்
பூண்டு 6 பல்
சோம்பு 1 தேக்கரண்டி
கரம்மஸாலாத்தூள் 3 சிட்டிகை
மஞ்சள்தூள் அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் 4
நெய் 2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் 2
கொத்தமல்லி இலை 1 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 100 மில்லி லிட்டர்
Preparation Method
சப்பாத்தி தயாரிப்பதற்கு செய்முறை:
பாத்திரத்தில் மாவைப் போட்டு அதில் கொஞ்சம், கொஞ்சமாக தண்ணீர் தெளித்து மென்மையான மாவாக பிசைந்து, நெய் சேர்த்து மறுபடியும் மென்மையாக பிசைந்து மூடி வைக்கவும்.
மஸாலா தயாரிப்பதற்கு செய்முறை:
உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் நீக்கி மசித்துக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு, சோம்பு இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இஞ்சி—பூண்டு—சோம்பு, அரைத்தது, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
வதங்கியதும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
அதன்பின் உருளைக்கிழங்கு, மஞ்சள்தூள், கரம்மஸாலாத்தூள், உப்பு போட்டு, கிளறி வதங்கியதும் கொத்தமல்லி இலை போட்டு கிளறி இறக்கி வைத்துக் கொள்ளவும்.
மஸாலா சப்பாத்தி செய்முறை:
மாவில் சிறிதளவு எடுத்து, பூரிப்பலகை மீது வைத்து, கனமான வட்டமாகத் தேய்க்கவும்.
இதன் நடுவில் சிறிதளவு உருளைக்கிழங்கு மஸாலா வைத்துக் கொள்ளவும்.
இன்னொரு வட்டம் தேய்த்து மஸாலா வைத்துள்ள சப்பாத்தி மீது வைத்து, மூடி ஓரங்களில் சிறிதளவு தண்ணீர் தடவி, ஒட்டிக் கொள்ளவும்.
அதன்பின் சிறிதளவு மாவில் புரட்டி, எடுத்து, மறுபடியும் தேய்த்து வைத்துக் கொள்ளவும். இதுபோல எல்லா மாவிலும் செய்து வைத்து கொள்ளவும்.
தோசைக்கல்லை காய வைத்து, மஸாலா நிரப்பப்பட்ட சப்பாத்தியைப் போட்டு சுற்றிலும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றிவும்.
இரண்டு பக்கமும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, சப்பாத்தி நன்றாக வெந்ததும் எடுத்து பரிமாறவும்.