லேயர்ட் சப்பாத்தி

Spread The Taste
Serves
2 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 1 சப்பாத்திக்கு 5 நிமிடங்கள்
Hits   : 5165
Likes :

Preparation Method

  • ஒரு பாத்திரத்தில் 2 கப் மைதா மாவு, உப்புத்தூள் கலந்து கொள்ளவும்.
  • அதன்பின் சிறிதளவு வெது வெதுப்பான தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து மென்மையாக பிசையவும்.
  • பிசைந்த மாவை ஈரத் துணியால் 30 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
  • மீதமுள்ள மைதா மாவை தனியாக வைத்துக் கொள்ளவும்.
  • அதன்பின், பிசைந்து வைத்துள்ள மாவை 4 பாகமாக பிரித்துக் கொள்ளவும்.
  • ஒரு பாகத்தை தனியாக வைத்துள்ள மாவில் புரட்டிக் கொள்ளவும்.
  • கையில் சிறிதளவு எண்ணெய் தடவிக் கொள்ளவும்.
  • மாவில் புரட்டிய பாகத்தை பூரிப்பலகையில் வைத்து மிக மெல்லிய வட்டமாக தேய்க்கவும்.
  • இதன்மீது சிறிதளவு எண்ணெய் தடவவும். சிறிதளவு மாவு பரவலாக தூவவும்.
  • அதன்பின் இரண்டு கைகளாலும் வட்டத்தைப் பிடித்து சிறு சிறு விசிறி மடிப்புகள் போல செய்து, இரண்டு முனைகளையும் ஒன்று சேர்ப்பது போல உருட்டி ஒரு முனையை நடுவில் வைத்து, இதன்மீது அடுத்த முனையை வைத்து லேஸாக அழுத்தி, பொருத்தவும்.
  • இதை மறுபடியும் மாவில் புரட்டி பூரிப்பலகை மீது வைத்து அதிகப்பட்சம் 7 அங்குலத்திற்கு வட்டமாக தேய்த்துக் கொள்ளவும்.
  • இதுபோல மீதமுள்ள 3 பாகங்களிலும் செய்து வைத்துக் கொள்ளவும்.
  • தோசைக்கல்லை காய வைத்து தேய்த்த வட்டங்களில் ஒன்றை எடுத்து, போட்டு, இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, மெதுவாக திருப்பிப் போட்டு, அதன்பின் மறுபடியும் திருப்பிப் போட்டு, நன்றாக வெந்ததும் எடுத்து வைக்கவும்.
  • இதுபோல மீதமுள்ள 3 பாகங்களையும் செய்து, லேயர் சப்பாத்திகள் தயாரித்து, பரிமாறவும்.
Engineered By ZITIMA