முட்டை சப்பாத்தி

Spread The Taste
Serves
5 நபர்களுக்கு
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 15 நிமிடங்கள்
Hits   : 6264
Likes :

Preparation Method

  • கோதுமை மாவு அல்லது மைதாமாவுடன் சிறிதளவு தண்ணீர், உப்புத்தூள், நெய் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  • வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி இவற்றை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • முட்டையை உப்பு சேர்த்து, நன்றாக அடித்துக் கலக்கிக் கொள்ளவும்.
  • பிசைந்து வைத்துள்ள மாவில் சப்பாத்திகள் செய்து வைக்கவும்.
  • ஆறிய பிறகு சப்பாத்திகளை மிக மெல்லியதான, சிறு துண்டுகளாக நறுக்கி அல்லது கையால் பிய்த்துப் போட்டு வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, கறிவேப்பிலை இவற்றைப் போட்டு வதக்கவும்.
  • அதன்பிறகு சப்பாத்தி துண்டுகளைப் போட்டு அடித்து வைத்துள்ள முட்டையைப் போட்டு, நன்றாகக் கிளறி, முட்டை வெந்ததும் இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA