Preparation Time: 3 நிமிடங்கள் Cooking Time: 1 நானுக்கு 5 நிமிடங்கள்
Hits : 7965 Likes :
Ingredients
மைதா மாவு 500 கிராம்
தயிர் அரை கப்
ஈஸ்ட் (Dried Yeast) ¾ தேக்கரண்டி
சர்க்கரை அரை தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் (Baking Powder) ¾ தேக்கரண்டி
சமையல் சோடா ¾ தேக்கரண்டி
நெய் 4 தேக்கரண்டி
உப்பு 1¼ தேக்கரண்டி
பால் அரை கப்
வெண்ணெய் 4 தேக்கரண்டி
Preparation Method
மைதாமாவுடன் உப்புத்தூள், பேக்கிங் பவுடர், சமையல் சோடா இவற்றை சேர்த்து 3 முறை சலித்துக் கொள்ளவும்.
ஈஸ்ட்டை வெதுவெதுப்பான பாலில் கலந்து 10 நிமிடங்கள் வைக்கவும்.
சலித்து வைத்துள்ள மைதாமாவு கலவையை அகன்ற பாத்திரத்தில் போட்டு நடுவில் ஒரு பள்ளம் செய்து கொள்ளவும்.
ஈஸ்ட்டில் கரைத்த பால் மற்றும் சர்க்கரையை அந்தப் பள்ளத்தில் ஊற்றவும்.
1 நிமிடம் கழித்து, நெய் சேர்த்து மாவை நன்றாக கலக்கவும். கலக்கும் போது தேவைப்பட்டால் சிறிதளவு சுடுதண்ணீர் தெளித்து, சற்று இளக்கமான மாவாகப் பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதன் மீது ஈரத்துணி போட்டு, பாத்திரத்தை மூடி வைக்கவும்.
6 மணி நேரம் கழித்து மாவில் பெரிய உருண்டைகள் செய்து வைக்கவும்.
உருண்டைணை பூரிப்பலகை மீது வைத்து, பூரிக்கட்டையால் சற்று பருமனான வட்டமாகத் தேய்த்து வைத்துக் கொள்ளவும்.
வட்டத்தின் ஒரு பகுதியைப் பிடித்து இழுத்து நீள்வட்டமான வடிவமாக்கிக் கொள்ளவும்.
தோசைக்கல் அல்லது Non—Stick—Pan—ஐ காய வைத்துக் கொள்ளவும்.
தேய்த்து வைத்துள்ள நீள்வட்டமான மாவின் மீது தண்ணீர் தடவிக் கொள்ளவும்.
தண்ணீர் தடவிய பகுதி கீழ்ப்பக்கம் இருக்கும்படி போடவும்.
மிதமான தீயில் வைத்து மூடி வைக்கவும்.
அதன்பின் Non—Stick—Pan—ன் கைபிடியைப் பிடித்து மாவோடு அனலில் காட்டவும்.
நன்றக வெந்ததும், எடுத்து வைக்கவும்.
இதுபோல எல்லா மாவிலும் 'நான்' தயாரித்து வெண்ணெய் தடவி பரிமாறவும்.