சேமியா ரவா இட்லி

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 15 நிமிடங்கள்
Hits   : 2955
Likes :

Preparation Method

  • வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் சேமியாவை லேஸாக வறுத்து ஒரு பாத்திரத்தில் (Bowl) போட்டுக் கொள்ளவும்.
  • அதே வாணலியில் ரவையைப் போட்டு லேஸாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.  
  • வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
  • அதே வாணலியில் 1 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கி, கேரட், பீன்ஸ் இவற்றை போட்டு வதக்கி, இறக்கி ஆற விடவும்.
  • தயிரை நன்றாக கலக்கிக் கொள்ளவும்.
  • தயிருடன் வதக்கிய காய்கறி கலவை, வறுத்து வைத்துள்ள சேமியா, ரவை, உப்பு இவற்றை கலந்து, கிளறி வைக்கவும்.
  • 30 நிமிடங்கள் ஆனபின் தயிர்—சேமியா—ரவை கலவை கெட்டியாக இருந்தால் மிகச் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கிளறிக் கொள்ளவும்.
  • இட்லி தட்டில் துணி விரித்து, தயிர் கலவையை ஊற்றி, இட்லிகளாக வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA