Preparation Time: 10 நிமிடங்கள் Cooking Time: நிமிடங்கள்
Hits : 7656 Likes :
Ingredients
ஐஸ்க்ரீம் 6 ஸ்கூப் (Scoop)
கார்ன் ஃப்ளேக்ஸ் (Corn Flakes) 5 மேஜைக்கரண்டி
முட்டை 2
தேங்காய்த்துறுவல் (விரும்பினால்) 2 மேஜைக்கரண்டி
பாதாம்பருப்பு 10
முந்திரிப்பருப்பு 10
தேன் தேவையான அளவு
நெய் 1 மேஜைக்கரண்டி
இதயம் நல்லெண்ணெய் 300 மில்லி லிட்டர்
Preparation Method
கார்ன் ஃப்ளேக்ஸை கரகரப்பான தூளாக்கிக் கொள்ளவும்.
பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்து, சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து அடித்து வைத்துக் கொள்ளவும்.
ஐஸ்க்ரீமை ஃப்ரீஜரில் (Freezer) சில நிமிடங்கள் வைத்து எடுத்து முட்டையில் நனைத்து, அதன்பின் கார்ன் ஃப்ளேக்ஸ் தூளில் புரட்டி எடுத்து மறுபடியும் ஃப்ரீஜரில் 15 நிமிடங்கள் வைக்கவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் ஐஸ்க்ரீம் உருண்டைகளை (Scoop) ஒவ்வொன்றாக போட்டு 10 வினாடிகளில் எடுத்து விடவும்.
பரிமாறும் சிறிய பாத்திரத்தில் (Bowl) வைத்து தேங்காய்த்துறுவல், தேன், வறுத்து வைத்துள்ள முந்திரிப்பருப்பு மற்றும் பாதாம் பருப்பை சுற்றிலும் வைத்து பரிமாறவும்.