விருதுநகர் பரோட்டா

Spread The Taste
Serves
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 1 பரோட்டாவிற்கு 6 நிமிடங்கள்
Hits   : 11487
Likes :

Preparation Method

  • மைதாமாவு, சிறிதளவு தண்ணீர், முட்டை, உப்புத்தூள், இவற்றைக் கலந்து, சற்று தளர்த்தியாகப் பிசைந்து, 3 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் சேர்த்து, மறுபடியும் பிசைந்து கொள்ளவும்.
  • 6 மணி நேரம் மூடி வைக்கவும்.
  • அதன்பின் பூரிப்பலகை மீது சிறிதளவு இதயம் நல்லெண்ணெய் தடவிக் கொள்ளவும்.
  • சிறிதளவு மாவை எடுத்து, உருண்டையாக்கி, பூரிப்பலகை மீது வைத்து, விரல்களால் தட்டி பலகை அளவு இழுத்து, விரிக்கவும்.
  • விரித்த மாவை மடிப்புகளாக செய்து, நீளமாக ஆனதும், அப்படியே வட்டமாக சுற்றி, அரை அங்குல பருமனாகத் தட்டிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் செய்து வைத்துள்ள பரோட்டாக்களை ஒரு தடவைக்கு 2 வீதம் போட்டு, பொன் நிறமாக, மொறு மொறுப்பாக (Deep Fry) பொரித்து எடுக்கவும்.
  • பொரித்து எடுத்த பரோட்டாக்களை ஒரு தட்டில் வைத்து, இரண்டு கைகளாலும் நெறித்து, அதன்பின் பரிமாறவும்.
Engineered By ZITIMA