கும்பகோணம் கடப்பா

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 10677
Likes :

Preparation Method

  • சிறு பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து, குழைய வேக வைத்துக் கொள்ளவும்.
  • பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தக்காளியை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
  • உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தேங்காய்த்துறுவல், சோம்பு, இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பச்சை மிளகாய், பொரிகடலையை வறுத்து அரைத்துக் கொள்ளவும்.
  • பாத்திரத்தில் மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு, தாளித்து அதன்பின் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை போட்டு, தாளித்து வெங்காயம், தக்காளி, போட்டு வதக்கவும்.
  • அதன்பின் அரைத்த தேங்காய், சோம்பு, இஞ்சி—பூண்டு அரைத்தது போட்டு வதக்கவும்.
  • வதக்கிய பின் பொரிகடலைத்தூள், பச்சை மிளகாய் அரைத்தது போட்டு வதக்கி, சிறுபருப்பை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
  • சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்து மூடி வைக்கவும்.
  • 10 நிமிடங்கள் ஆன பின், திறந்து உருளைக்கிழங்கு துண்டுகளைப் போட்டுக் கிளறவும்.
  • அதன்பின் எலுமிச்சைச்சாறு, கொத்தமல்லி இலை போட்டு இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA