பூசணியின் தோல் மற்றும் விதை நீக்கி விட்டு சிறு துண்டுகளாக, நறுக்கிக் கொள்ளவும்.
ஏலக்காய் மற்றும் 1 மேஜைக்கரண்டி சர்க்கரை சேர்த்து அரைத்து சலித்து எடுத்து தனியே வைக்கவும்.
முந்திரிப்பருப்பை வறுத்து வைத்துக் கொள்ளவும்.
பாலுடன் குங்குமப்பூவை கலந்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் 4 மேஜைக்கரண்டி நெய் ஊற்றி, லேஸாக காய்ந்ததும் பூசணித் துண்டுகளைப் போட்டு சில நிமிடங்கள் வதக்கவும்.
அதன்பின் குங்குமப்பூ கலந்த பாலை ஊற்றவும்.
மீதமுள்ள சர்க்கரையை ¾ கப் தண்ணீரில் கலந்து சூடேற்றி மிக இளம் பாகாக காய்ச்சி இறக்கி வைத்துக் கொள்ளவும்.
பூசணித் துண்டுகள் நன்றாக வெந்து, பால் முழுவதும் வற்றும் வரை கிளறி, மரக்கரண்டி அல்லது மத்தின் உதவியால் மசித்து, சர்க்கரைக் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கிளறவும். (கிளறுவதை நிறுத்தக் கூடாது.)
அதன்பின் மிதமான தீயில் வைத்து மீதமுள்ள நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கிளறி அனைத்தும் நன்றாக கலந்ததும் ஏலக்காய் பொடி, பச்சைக் கற்பூரம் வறுத்த முந்திரிப்பருப்பு இவற்றை சேர்த்து அல்வா, பாத்திரத்தின் ஓரங்களில் ஒட்டாமல் இருக்கும் பக்குவத்தில் இறக்கி, பரிமாறவும்.