Preparation Time: 40 நிமிடங்கள் Cooking Time: 10 நிமிடங்கள்
Hits : 9554 Likes :
Ingredients
புழுங்கல் அரிசி 100 கிராம்
உளுந்து 100 கிராம்
பச்சரிசி 100 கிராம்
சுக்குப்பொடி 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
மிளகு 6
கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் 1
முந்திரிப்பருப்பு 6
கறிவேப்பிலை 1 ஆர்க்கு
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 3 மேஜைக்கரண்டி
Preparation Method
புழுங்கல் அரிசி மற்றும் பச்சரிசியை ஒன்றாக கலந்து, தண்ணீரில் 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
உளுந்தை தனியாக தண்ணீரில் 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
முந்திரிப்பருப்பை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
சீரகம் மற்றும் மிளகை ஒன்றிரண்டான தூளாக்கிக் கொள்ளவும்.
அரிசி வகைகளை தனியாக ஆட்டி எடுத்துக் கொள்ளவும்.
உளுந்தை தனியாக ஆட்டி, மற்றும் அரிசி மாவு, உளுந்து மாவு இரண்டையும் ஒன்றாக கலந்து உப்பு மற்றும் சுக்குப்பொடி சேர்த்து மூடி வைக்கவும். (இரவில் ஆட்டி வைத்து காலையில் தயாரிக்கலாம்.)
வாணலியில் 1 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, தூளாக்கிய மிளகு, சீரகம், சுக்குப்பொடி, முந்திரிப்பருப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை இவற்றைப் போட்டு வறுத்து மாவுடன் கலந்து கிளறிக் கொள்ளவும்.
இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, கொதிக்க வைக்கவும்.
இட்லி தட்டுகளில் இதயம் நல்லெண்ணெய் தடவியபின் மாவை ஊற்றி, வேக வைத்து எடுத்து சட்னியுடன் பரிமாறவும்.