Preparation Time: 40 நிமிடங்கள் Cooking Time: 15 நிமிடங்கள்
Hits : 12703 Likes :
Ingredients
மைதாமாவு 200 கிராம்
வெல்லத்தூள் 200 கிராம்
ஏலக்காய் பொடி அரை தேக்கரண்டி
கடலைப்பருப்பு 200 கிராம்
மஞ்சள் கலர் பொடி (Yellow Colour Powder) 3 சிட்டிகை
நெய் தேவையான அளவு
Preparation Method
மைதாமாவுடன் கலர் பொடி மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சற்று தளர்த்தியாக பிசைந்து கொள்ளவும்.
1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் சேர்த்து மறுபடியும் நன்றாக பிசைந்து 3 மணி நேரம் மூடி வைக்கவும்.
கடலைப்பருப்பை தண்ணீரில் 2 மணி நேரம் ஊற விடவும்.
அதன்பின் தண்ணீரை வடித்துவிட்டு கடலைப்பருப்புடன் வெல்லத்தூள், ஏலக்காய் பொடி சேர்த்து ஆட்டிக் கொள்ளவும்.
கடலைப்பருப்பு கலவையில் உருண்டைகள் செய்து கொள்ளவும்.
மைதா மாவில் சிறிதளவு எடுத்து, பூரிப்பலகையில் வைத்து இதயம் நல்லெண்ணெய் தடவி, அதில் வைத்து லேஸாக விரித்து, இதன் நடுவில் கடலைப்பருப்பு உருண்டையை வைத்து, மாவை இழுத்து உருண்டையை மூடி மெதுவாக, மறுபடியும் வட்டமாகத் தட்டிக் கொள்ளவும்.
இது போல எல்லா மாவிலும் செய்து வைத்துக் கொள்ளவும்.
தோசைக் கல்லைக் காய வைத்து, சிறிதளவு நெய் ஊற்றி, தட்டி வைத்துள்ள போளியை போட்டு, சுற்றிலும் நெய் ஊற்றவும்.