மீன்—தயிர் குழம்பு

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 3347
Likes :

Preparation Method

  • மீன் துண்டுகளுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்புத்தூள் போட்டுப் புரட்டி ஊற விடவும்.
  • வெங்காயத்தை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
  • தயிருடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்புத்தூள் கலந்து வைக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மீன் துண்டுகளைப் போட்டுப் பொரித்து எடுத்து, தனியே வைக்கவும் (Shallow Fry).
  • மீன் பொரித்த அதே எண்ணெய்யில் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டுத் தாளித்து அரைத்து வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
  • இஞ்சி—பூண்டு அரைத்தது போட்டு நன்றாக வதக்கவும்.
  • வதங்கியபின், தயிர்க்கலவையை ஊற்றிக் கிளறவும்.
  • உப்பு சேர்க்கவும்.
  • தயிர்க்கலவை ஓரளவு கெட்டியானதும் கொதித்ததும் பொரித்து வைத்துள்ள மீன் துண்டுகளைப் போடவும்.
  • தயிர்க்கலவையை மீன் துண்டுகள் மீது ஊற்றவும்.
  • தேவைப்பட்டால் உப்பு சேர்க்கவும்.
  • குழம்பு கெட்டியானதும் இறக்கி, சூடான சாதத்துடன் பரிமாறவும்.
Engineered By ZITIMA