Preparation Time: 30 நிமிடங்கள் Cooking Time: 30 நிமிடங்கள்
Hits : 5100 Likes :
Ingredients
சுத்தம் செய்த மீன் துண்டுகள் 500 கிராம்
ஓமம் 2 தேக்கரண்டி
இஞ்சி—பூண்டு அரைத்தது 2 தேக்கரண்டி
எலுமிச்சைச்சாறு 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
முட்டை 1
கடலைமாவு 4 மேஜைக்கரண்டி
அரிசிமாவு 6 மேஜைக்கரண்டி
உப்புத்தூள் தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 300 மில்லி லிட்டர்
Preparation Method
முட்டையை Egg Beater—ன் உதவியால் நன்றாக அடித்துக் கொள்ளவும்.
மீன் துண்டுகளுடன் அடித்து வைத்துள்ள முட்டையில் பாதி அளவு, எலுமிச்சைச்சாறு, ஓமம், கடலைமாவு, அரிசிமாவு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், 1 தேக்கரண்டி எண்ணெய், இஞ்சி—பூண்டு அரைத்தது, உப்புத்தூள் ஆகியவற்றைக் கலந்து, நன்றாகப் புரட்டி 30 நிமிடங்கள் ஊற விடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மீன் துண்டுகளைப் போட்டுப் பொரித்து (Deep Fry) எடுத்து, பரிமாறவும்.