Preparation Time: 50 நிமிடங்கள் Cooking Time: 30 நிமிடங்கள்
Hits : 2989 Likes :
Ingredients
பச்சரிசி 500 கிராம்
சின்ன அளவிலான ப்ரெளன்
கலர் கொண்டைக்கடலை 250 கிராம்
பெரிய வெங்காயம் 1
சிகப்பு மிளகாய் 1
கடுகு 1 தேக்கரண்டி
தேங்காய்த்துறுவல் 3 மேஜைக்கரண்டி
பொரிகடலைத்தூள் 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் அரை தேக்கரண்டி
கரம்மஸாலாத்தூள் அரை தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 2 மேஜைக்கரண்டி
Preparation Method
அரிசியை ஊற வைத்து, மாவாக்கிக் கொள்ளவும்.
கொண்டைக்கடலையை முன் இரவு ஊற வைத்து, காலையில் மிருதுவாக வேக வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், சிகப்பு மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, போட்டு தாளித்து, வெங்காயம், சிகப்பு மிளகாய் போட்டு வதக்கவும்.
வதக்கியபின் கொண்டைக்கடலையை போட்டு, உப்பு, மிளகாய்த்தூள், கரம்மஸாலாத்தூள், பொரிகடலைத்தூள், தேங்காய்த்துறுவல் இவற்றை சேர்த்துக் கிளறி இறக்கி வைத்துக் கொள்ளவும்.
மாவில் சிறிதளவு தண்ணீர், உப்புத்தூள் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
மாவில் சிறிதளவு எடுத்து மெல்லிய வட்டமாகத் தட்டி இதன் நடுவே கொண்டைக்கடலை சுண்டலை சிறிதளவு வைத்து அரை வட்டமாக மூடி, ஓரங்களைப் பொருத்திக் கொள்ளவும்.
இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, கொதிக்க வைக்கவும்.
இட்லி தட்டுகளில் சில கொழுக்கட்டைகளை வைத்து வேக வைத்து எடுக்கவும்.
செய்து வைத்துள்ள எல்லா கொழுக்கட்டைகளையும் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.